சளிக்கு தைலம் தேய்த்த 8 மாத குழந்தை உயிரிழப்பு..!
சென்னையில் 8 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
சென்னை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். இவருக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு சளி பிரச்சனை அதிமாக உள்ள காரணமாக தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால், சளிப்பிரச்சினை இல்லாமல் போய்விடும் என நினைத்து, அவ்விரண்டையும் சேர்த்துக் குழைத்து, குழந்தையின் மூக்கில் தேய்த்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
திடீரென குழந்தைக்கு மூச்சி திணறல் ஏற்படவே உடனடியாக குழந்தைய்கள் நல மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குழந்தை உரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது