1. Home
  2. தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு..!!

1

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவர், உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் 6ம் தேதி உயிரிழந்தார். எனவே, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் களத்தில் போட்டியிடுகின்றனர். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டது. மொத்தம் 29 களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 276 வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்களது வாக்கினை செலுத்தினர். மேலும் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, விக்கிரவாண்டி தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கினார்.விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஆறு மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடந்தது. வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகளும், மதியம் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 77.73 தவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. அதன்படி மொத்தம் 82.48% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 195495 பேர் வாக்களித்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

Trending News

Latest News

You May Like