1. Home
  2. தமிழ்நாடு

800 படத்திற்கு 8,000 எதிர்ப்பு! முத்தையா முரளிதரன் விளக்கம்!

800 படத்திற்கு 8,000 எதிர்ப்பு! முத்தையா முரளிதரன் விளக்கம்!


தமிழில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் 800 பட சர்ச்சை குறித்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதா பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

முத்தையா முரளிதரனின் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரையிலான அவரது வாழ்க்கையை அந்தப்படம் பேசுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முத்தையா முரளிதரனின் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு காரணங்களுக்காக இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. காரணம் நான் பேசியதாக சில கருத்துக்கள் திரித்து சொல்லப்பட்டதன் விளைவுதான். ஒரு சராசரி மனிதனாக சிந்தித்துப் பாருங்கள். போர் நடக்கும் போது எங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. பள்ளியில் ஒன்றாக விளையாடிய நண்பன் மறுநாள் பார்த்தால் உயிருடன் இருக்கமாட்டான். வீட்டைவிட்டு வெளியேறியவர்கள் மீண்டும் வீடு திரும்பினால்தான் நிஜம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், போர் முடிவுற்று கடந்த 10 வருடங்களாக இரு பக்கமும் உயிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே கடந்த 2009-ம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என தெரிவித்தேன். ஒரு போதும் அப்பாவி மக்களின் கொலையை நான் ஆதரிக்கமாட்டேன். ஆதரித்தும் இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், நான் பள்ளி காலம் முதலே தமிழில்தான் படித்தேன். சிங்களர்கள் மத்தியில் வாழ்ந்ததால் எனக்கும் தாழ்வுமனப்பான்மை இருந்தது. அதனை தூக்கி எரிந்து கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேறியுள்ளேன்.

நான் எனது மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம் என்றும், செய்த உதவிகளை சொல்லிக்காட்டுவது என்றைக்கும் தாம் விரும்புவதில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like