விவசாயிகளுக்கு ரூ.8,000.. வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு..?
நடப்பு 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் அல்வா கிண்டி வழங்கவுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கிறது. இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 26,000 ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2023 பட்ஜெட்டில் இத்திட்டத்தின் தவணையை உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவணைத் தொகை 6,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், விவசாயிகளுக்கு 2,000 வீதம் 4 தவணைகளாக பிரித்து வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.