1. Home
  2. தமிழ்நாடு

8 காவலர்கள் உயிரிழப்பு !! ரவுடியின் வீட்டை தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகம்...

8 காவலர்கள் உயிரிழப்பு !! ரவுடியின் வீட்டை தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகம்...


உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் எட்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை ரவுடிகளைப் பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உள்பட மொத்தம் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர்.

8 காவலர்கள் உயிரிழப்பு !! ரவுடியின் வீட்டை தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகம்...

மேலும் சிலர் காயமடைந்தனர். பிரபல ரவுடி விகாஸ் துபேயை பிடிப்பதற்காக காவலர்கள் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கான்பூரில் இருந்த விகாஷ் துபேயின் வீட்டை, ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனமும் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் ரௌடி விகாஸ் துபே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரௌடியைப் பிடிக்க டிஎஸ்பி தேவேந்திர மில்ரா தலைமையிலான காவலர்கள் அந்தப் பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

இதனை அறிந்த ரௌடி கும்பல் காவலர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேவேந்திர மிஸ்ரா உள்பட மொத்தம் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து டிஜிபி கூறியதாவது:

ரவுடி விகாஸ் துபே மீது 307-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், அவரை கைது செய்ய காவலர்கள் சென்றிருந்தனர். அப்போது அங்கு ஜே.சி.பி. வாகனங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன,

இது காவலர்கள் வாகனங்களுக்கு இடையூறாக இருந்தது. காவலர்கள் படை இறங்கியதும், ரௌடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவலர்களும் தக்க பதிலடி கொடுத்து வந்துள்ளனர், ஆனால் ரௌடிகள் உயரமான இடத்தில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர், எனவே காவலர்கள் 8 பேர் உயிரிழந்ததாக டிஜிபி அவாஸ்தி கூறியுள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like