1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாளில்  8 மசோதாக்கள்! களைகட்டும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் !

ஒரே நாளில்  8 மசோதாக்கள்! களைகட்டும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் !


கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  நடத்தப்பட்டு வருகின்றது. நேற்றைய கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்களில் 359 மட்டுமே  கலந்து கொண்டனர்.

ஒரே நாளில் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையத்துக்கான மசோதாவும், இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் மசோதாவும்  நிறைவேற்றப்பட்டது.  மேலும் புதிதாக 8 மசோதாக்கள்  அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி பாராளுமன்றம் உறுப்பினர்கள் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் மசோதா 2000ம் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, விவசாயிகள் ஒப்பந்தம், விவசாயிகள் வர்த்தக மசோதா, வங்கி ஒழுங்குமுறை (திருத்தம்) மசோதா, காரணி ஒழுங்குமுறை (திருத்தம்) மசோதா, உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மசோதா, தகுதிவாய்ந்த நிதி இருதரப்பு வலையமைப்பு ஒப்பந்த மசோதா ஆகிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதுதவிர 2020-21ம் நிதியாண்டுக்கான மானிய கோரிக்கையின் முதல் தொகுதியும் நேற்று  தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like