1. Home
  2. தமிழ்நாடு

ரூ.8 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்!!

ரூ.8 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில், ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

2019ஆம் ஆண்டுக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்ட நிலையில், 8 கோடி மதிப்புள்ள ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பால்கர் பகுதியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


ரூ.8 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்!!

கள்ள நோட்டு புழக்கம் மற்றும் கருப்பு பணத்தை அழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. ஆனால் அதற்கு பிறகும் கள்ள நோட்டு புழக்கம் உள்ளது.

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்குவதும் குறையவில்லை. இந்நிலையில் மும்பையில் கள்ள நோட்டு புழக்கம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like