வெளியான அதிர்ச்சி தகவல் : 5 ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 7.77 லட்சம் பேர் உயிரிழப்பு..!
சாலை விபத்துகள் தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து பெற்ற விவரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி 2018 -2022ல் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்தில் 7.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்கள்
உ.பி., - 1,08,882
தமிழகம் - 84,316
மஹாராஷ்டிரா - 66,370
ம.பி., - 58,580
கர்நாடகா - 53,448
ராஜஸ்தான் - 51,280
ஆந்திரா - 39,058
பீஹார்- 36,191
தெலுங்கானா - 35,565
குஜராத் - 36,626 பேர் உயிர் இழந்துள்ளனர்.
2022ம் ஆண்டு மட்டும் 1,68,491 உயிர் இழந்துள்ளனர்.இந்த ஆண்டில்,
உ.பி.,யில் - 22,595 பேரும்
மஹாராஷ்டிராவில்-15, 224 பேரும்
தமிழகத்தில் -17,884 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டியது, மொபைல் போன் பயன்படுத்துல், மதுபோதையில் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறி வாகனம் இயக்கியது ஆகியவை சாலை விபத்துக்கான முக்கிய காரணியாக உள்ளது.
விபத்துகளை குறைக்க, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்து தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்து மீறல்களை கட்டுப்படுத்த அபராதத்தை உயர்த்தும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு திருத்தியது. 2020 ம் ஆண்டில் மட்டும் ரூ.36,700 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.
சமீபத்தில் லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ' இந்தியாவில் அதிகரிக்கும் சாலை விபத்து காரணமாக, சர்வதேச அளவில் நடக்கும் கூட்டங்களில் முகத்தை மூட முயன்றேன்,' எனக்கூறியிருந்தார்.