துக்க நிகழ்வில் பங்கேற்ற 77 பேருக்கு கொரோனா.. அச்சத்தில் சேலம் மக்கள் !

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் தான் அதன் தாக்கம் உச்சத்தில் உள்ளது.
ஆனால் கடந்த சில வாரங்களாக சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மதுரை, திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு பரவலாக பாதிப்பு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் துக்க வீட்டிற்கு சென்றதன் மூலம் 77 பேருக்கு கொரோனா பரவியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூரை அடுத்த பண்ணவாடியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், மேலும் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
எனினும், ஊருக்குள் மளிகைக் கடைகளை வழக்கம் போல் திறந்துவைக்கபட்டுள்ளதால், சமூக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களில், 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மேலும் இந்த துக்க வீட்டில் கலந்து கொண்ட 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
newstm.in