“7.5% இடஒதுக்கீடு மசோதா ஒப்புதலுக்கு அவகாசம் தேவை!” : ஆளுநர் பதில்!

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க அவகாசம் தேவை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆளுங்கட்சி உள்பட தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஐந்து முக்கிய அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர். மேலும் அரசுப்பள்ளி மாணவர்கள் 300 பேர் இந்த ஆண்டு மருத்துப் படிப்பில் சேருவது உறுதி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனிடையே மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கதாததை கண்டித்து வரும் அக்டோபர் 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என திமுக போராட்டம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் திமுக சார்பில் ஆளுநருக்கு அனுப்பட்டிருக்கும் கடிதத்திற்கு பதிலளித்துள்ள ஆளுநர், மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
newstm.in