வேறு வழியின்றி ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! மு.க.ஸ்டாலின் !

திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் மனமாற்றத்துக்கு காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டரில், “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!
45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!
— M.K.Stalin (@mkstalin) October 30, 2020
திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம்.
இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்! pic.twitter.com/GTrRdAoGRz
திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என்று அதில் பதிவிட்டுள்ளார்.