1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் பணியாற்றும் 73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்..!

1

சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றம் அரங்கேறி இருக்கிறது. சென்னை காவல் துறையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே நாள் இரவில் மாற்றப்பட்டு இருக்கின்றன.

துரைப்பாக்கம், சாஸ்திரி நகர், ஐஸ் ஹவுஸ், ஐசிஎப், வாஷர்மேன்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் உள்ளிட்ட 73 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாது, அனைத்து மகளிர் காவல் நிலையம், க்ரைம், குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல்துறைகளிலும் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே அடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். ஒரே நாள் இரவில் அரங்கேறியுள்ள இந்த பணியிட மாற்றம் காவல் துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது


 


 

Trending News

Latest News

You May Like