1. Home
  2. தமிழ்நாடு

72 வயது முதியவர்… இ-பாஸ் கிடைக்காத விரக்தியில்  தற்கொலை !!

72 வயது முதியவர்… இ-பாஸ் கிடைக்காத விரக்தியில்  தற்கொலை !!


மனைவியும் மகளையும் பிரிந்து தனிமையில் இருந்த முதியவர்க்கு, இ-பாஸ் கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோட்டில் உள்ள சாந்தி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில் காதம்பரி பிளாக் ஏ 31 என்ற வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. 

அங்குள்ள அசோசியேஷன் நிர்வாகிகள் வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே அனைவரும் சென்றனர்.

அப்போது வீட்டின் உரிமையாளர் சந்திரமோகன் (72) ஹாலில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை செய்து விசாரித்து வந்தனர்.அப்போது, ``சந்திரமோகனின் மனைவி வசந்திதேவி, இந்தத் தம்பதியின் மகள் ஷில்பா. இவர்கள் 3 பேரும் இந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

 வசந்திதேவியின் அக்கா மகள் பெங்களூரில் குடியிருக்கிறார். அவரைப் பார்க்க கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருக்கு வசந்திதேவி, ஷில்பா ஆகியோர் சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக அவர்களால் சென்னைக்குத் திரும்பி வரமுடியவில்லை.

அதனால், பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 6 மாதங்கள் சந்திரமோகன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். முதுமை, தனிமை ஆகியவற்றால் மனமுடைந்துள்ளார்.

 மனைவி, மகளிடம் வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். உடனே அவர்கள் பெங்களூருலிருந்து சென்னை வர இ-பாஸுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

 மனைவி, மகளைப் பிரிந்த சூழலில் சந்திரமோகன் தறகொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதனால், வீட்டின் ஹாலில் மின்விசிறியில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். 

அவரின் மரணம் குறித்து வசந்திதேவியிடம் கூறியபோது கடந்த 9-ம் தேதி என்னிடம் போனில் பேசினார். எதற்காக இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என்று கண்ணீர்மல்க கூறினார். 

சந்திரமோகன், தற்கொலை செய்து சில நாள்களாகியதால் அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. வசந்திதேவி, ஷில்பா ஆகியோர் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like