1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் 72.09% சதவீத வாக்குகள் பதிவு..!

1

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இதனால் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களித்து வரும் நிலை்யில், 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 51.41 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக சேலத்தில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாகவே உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% சதவீதம் பதிவாகியுள்ளது. தருமபுரி 75.44% சதவீதம், சிதம்பரம் 74.87% சதவீதம் பெற்று அடுத்தடுத்து உள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற வாக்குப் பதிவை விட இந்தமுறை 7 மணி நிலவரப்படி கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like