1. Home
  2. தமிழ்நாடு

7,000 விமான சேவைகள் பாதிப்பு – காரணம் என்ன?

7,000 விமான சேவைகள் பாதிப்பு – காரணம் என்ன?

உலகின் மிகப் பெரிய விமான போக்குவரத்து சேவை கொண்ட அமெரிக்காவில் விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அங்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணத்திற்கு மக்கள் விமானத்தை நம்பியே உள்ளனர். விமான சேவையை எஃப்ஏஏ எனப்படும் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் இயக்கி வருகிறது.

இந்நிலையில், எஃப்ஏஏ சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்நாட்டில் விமான சேவை பெரும் முடக்கத்தை கண்டது. NOTAM எனப்படும் விமான இயக்கத்தின் அடிப்படை விவரங்கள் குறித்த சர்வர் முடங்கியது.

இதனால் விமானங்கள் பாதுகாப்பாக இயங்குமா என்பதை கண்காணிக்க முடியவில்லை. வானில் பறக்கும் விமனத்தின் லைவ் ஸ்டேடஸ், அவற்றின் வழித்தடம் போன்றவற்றின் சிக்னல்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டன.


7,000 விமான சேவைகள் பாதிப்பு – காரணம் என்ன?


இதனால், பெரும்பாலான விமான சேவை முடங்கியது. டேக் ஆஃப் ஆன விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டன. இந்த எம்ர்ஜென்சி சூழலை சீர் செய்ய தொழில்நுட்ப குழுவினர் மின்னல் வேகத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த பாதிப்பு குறித்த விவரத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடனிடம் போக்குவரத்து அமைச்சர் விவரித்தார். இது சைபர் தாக்குதல் போன்ற திட்டமிட்ட சதி செயல் காரணமாக நிகழ்ந்துள்ளதா என்ற விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தீவிர முயற்சிக்குப் பின் தொழில்நுட்ப கோளாறு சீரமைக்கப்பட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. இந்த பாதிப்பு காரணமாக 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 6,000 விமான சேவைகள் தாமதமாகின.

newstm.in

Trending News

Latest News

You May Like