திருமண விருந்தில் ரசகுல்லா சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
உ.பி கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள மதர்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் சாப்பிட்ட குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருமண விருந்தில் உணவை உட்கொண்ட 200-க்கும் மேற்பட்டோரில் சுமார் 70 பேருக்கு அங்கு பரிமாறப்பட்ட ரசகுல்லாவை சாப்பிட்ட பிறகு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.