7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை !! சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் !! முதலமைச்சர் அறிவிப்பு

அறந்தாங்கியில் காணாமல் போன 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர், சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணமல் போன 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளார்.
Newstm.in