7 மாத கர்ப்பம் !! கொரோனா பணிக்காக சாலையில் நிற்கும் பெண் போலீஸ் !! நெகிழவைக்கும் சம்பவம்.

7 மாத கர்ப்பம் !! கொரோனா பணிக்காக சாலையில் நிற்கும் பெண் போலீஸ் !! நெகிழவைக்கும் சம்பவம்.

7 மாத கர்ப்பம் !! கொரோனா பணிக்காக சாலையில் நிற்கும் பெண் போலீஸ் !! நெகிழவைக்கும் சம்பவம்.
X

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கவும், அசம்பாவித செயல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இந்நிலையில் சத்தீஸ்கரின் ராய்பூரில் துணை நிலை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் அம்ரிதா சோரி என்ற பெண் காவல்துறை அதிகாரி, 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் சாலையில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் ;

தற்போதுள்ள இந்த சூழலில் எனது பணி மிக முக்கியமானது, 7 மாத கர்ப்பிணியான நான் சாலை நிற்கும்போது, அது என்னுடன் இருக்கும் மற்ற காவல்துறை பணியாளர்களுக்கு மேலும் ஊக்கம் தருவதாக இருக்கிறது. தன்னுடன் பணியாற்றும் அனைவரும் தமக்கு ஆதரவாக இருப்பதாகவும் அம்ரிதா சோரி கூறியுள்ளார்.

இது போன்ற காவலர்கள் தனது உடல் நிலையை பற்றி எண்ணாமல் , நாட்டு மக்களின் நலன் கருதி பணிக்கு வந்துள்ளார். இது போல் பொதுமக்களும் தங்களின் பொறுப்புணர்ந்து , வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்து கொரோனாவை விரட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Newstm.in

Next Story
Share it