1. Home
  2. தமிழ்நாடு

ஒரே இரவில் 7 முறை லேசான நிலநடுக்கம் ; கிராம மக்கள் அச்சம்..!!

ஒரே இரவில் 7 முறை லேசான நிலநடுக்கம் ; கிராம மக்கள் அச்சம்..!!


வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி வரையில் இன்று அதிகாலை 4.17 மணி முதல் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. வேலூரில் இருந்து 59 கி.மீ. தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

ஏற்கனவே பலமுறை வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் துவங்கி திருப்பத்தூர் வரையில் பூமத்திய ரேகை நேர்கோடு என்பதால் இப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

குடியாத்தம், தட்டப்பாறை மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவில் 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள் சில அடி தூரம் நகர்ந்துள்ளது. கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளது. கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்தன. மின்விசிறிகள் தாறுமாறாக சுழன்றது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

Gudiyatham

சில நிமிடங்களுக்கு பின் நில அதிர்வு நின்றது சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் மீண்டும் என 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதில் 2 முறை சுமார் 3 வினாடிகள் வரை நில அதிர்வு நீடித்தது. அப்போது பயங்கர சத்தம் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 40 நாட்களில் 3-வது முறையாக நில அதிர்வு கண்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பெத்த திப்பபள்ளி அடுத்த சானுமா குலப்பள்ளி, பட்ட வான்ல பள்ளி ஆகிய கிராமங்களில் தொடர்ந்து 2 நாட்கள் நிலநடுக்கமும், பூமியில் இருந்து அதிக அளவு சத்தமும் ஏற்பட்டது.

இதேபோல் தமிழ்நாடு ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like