ஒரு இரவுக்கு மட்டும் வாடகை தலா ரூ.7 லட்சம்... வாய் பிளக்க வைத்த பிரபல நடிகை..!
நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கவுஷல் திருமணம் வரும் 9ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
இங்குள்ள பிரமாண்ட ரிசார்ட் ஒன்றில் மணமக்கள் தங்குவதற்கு அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. விக்கி கவுஷல் ராஜா மன்சிங் அறையிலும், கத்ரீனா கைஃப் ராணி பத்மாவதி அறையிலும் தங்குகிறார்களாம்.
அந்த அறைக்கு ஒரு இரவுக்கு மட்டும் வாடகை தலா ரூ.7 லட்சம். இரண்டு அறைகளிலும் நீச்சல் குளம், தோட்டம் இருக்கிறது. இந்த ரிசார்ட்டில்தான் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் வேறொரு ஹோட்டலில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இவர்களின் திருமணத்தையொட்டி அந்த ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கத்ரீனா கைஃப் தன் முன்னாள் காதலர்களான பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருக்கு திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.
நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கவுஷலும் தங்கும் அறைகளின் ஒரு நாள் இரவு வாடகை கட்டணத்தைக் கேட்ட பலரும், இது, காஸ்ட்லியான திருமணம்தான் என வாய் பிளக்கின்றனர்.