மதுரை மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 7 குழுக்கள் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!
மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோரும், மாநாட்டு விழா மலர் குழுவில் வைகைச் செல்வன், என்.தளவாய் சுந்தரம், முன்னாள் எம்.பி. வேணுகோபால், எஸ்.பி.சண்முகநாதன், வி.சரோஜா, இன்பதுரை, ரவி ஆகியோரும், மாநாட்டு பந்தல் குழுவில் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, ஜக்கையன், சிவபதி, ரத்தினவேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மாநாட்டு விளம்பரம், செய்தி தொடர்பு மற்றும் நிகழ்ச்சி நிரல் ஒருங்கிணைப்பு குழுவில் சி.விஜய பாஸ்கர், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன், வைகைச் செல்வன், கடம்பூர் ராஜூ, கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜ்சத்யன் ஆகியோரும், மாநாட்டு உணவு குழுவில் ஆர்.காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.பரஞ்ஜோதி, குமரகுரு, செந்தில்நாதன் ஆகியோரும்,
மாநாட்டு தீர்மானக் குழுவில் சி.பொன்னையன், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, டி.ஜெயக்குமார், செம்மலை, ஓ.எஸ்.மணியன், பென்ஜமின், நா.பாலகங்கா ஆகியோரும், மாநாட்டு வரவேற்பு குழுவில் பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, கே.பி.அன்பழகன், செல்லப்பாண்டியன், ராஜலட்சுமி, அருண்மொழி தேவன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கண்ட குழுக்களின் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மாநாடு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து குழுக்களுக்கும் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.