1. Home
  2. தமிழ்நாடு

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை காெட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை காெட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை


தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (நவ.27) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை காெட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை

மேலும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like