1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 7 அறிவிப்புகள்!

1

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்து வெள்ளி விழா சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

“கலைஞர் வழியில் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. திருக்குறளாகவே வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் எண்ணத்துக்கு உயிர் கொடுத்தவர் ஸ்தபதி. வள்ளுவர் சிலை தொடங்கி கருணாநிதியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். சிலை அமைத்ததற்கு எதற்கு வெள்ளி விழா என்று சில அதிமேதாவிகள் கேட்கின்றனர். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லத் தேவையில்லை. திருவள்ளுவர் தமிழர்களுக்கு இருக்கக் கூடிய அடையாளம். அதனால் திருவள்ளுவரை கொண்டாடுவோம் கொண்டாடிக் கொண்டே இருப்போம்.

12 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை பறை சாற்றக்கூடிய வகையில் 3டி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.

முதல் படகுக்கு காமராஜர் பெயரும், இரண்டாவது படகுக்கு மார்சல் நேசமணி பெயரும், மூன்றாவது படகுக்கு ஜி.யு. போப் பெயரும் வைக்கப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும்.

திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டிருப்பது போல தனியார் நிறுவனங்களிலும் எழுத ஊக்குவிக்கப்படும். ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும். திருக்குறளும், திருவள்ளுவர் சிலையும் நம் வாழ்க்கையை காக்கும் கேடயம். நம்மை அழிக்க நினைக்கும் தீமைகளை தடுக்கும்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

Trending News

Latest News

You May Like