கட்டிடங்களின் வாடகை 7% வரை உயர வாய்ப்பு.. ஆய்வறிக்கையில் தகவல்..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் அலுவலக கட்டடங்களின் வாடகை அடுத்த ஆண்டில் 5 முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக நைட் ஃபிராங்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைட் ஃபிராங்க் இந்தியா என்ற நிறுவனம் மனை வணிகம் தொடா்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
அதில் தனிவீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கான வாடகை எவ்வாறு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் அலுவலக கட்டடங்களுக்கான வாடகை அடுத்த ஆண்டில் 5 முதல் 7 சதவீதம் வரை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் உள்ள 24 முக்கிய நகரங்களில், பெங்களூருவில் வாடகை உயா்வு அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் 4 முதல் 6 சதவீதமும், மும்பையில் 3 முதல் 5 சதவீதமும் அலுவலக கட்டடங்களுக்கான வாடகை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.