துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த 6 வயது சிறுமி அசத்தல் சாதனை..!
ராமநாதபுரத்தை சேர்ந்த ரிதமிகா என்ற சிறுமி தனது பெற்றோர்களுடன் துபாயில்.வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரிதமிகா சிறுமி 1ம் வாய்ப்பாட்டில் தொடங்கி 10ம் வாய்ப்பாடு வரை எழுதியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் எழுதும் போது கிட்டத்தட்ட 100 திருக்குறளையும் கூறியுள்ளார். அதுவும் வெறும் 9 நிமிடங்களில். இதை தான் ரிதமிகா சிறுமி சாதனையாக செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் சாதனை கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.