1. Home
  2. தமிழ்நாடு

4 மாதங்களில் 6,900 பேரின் வேலை காலி.. வேட்டுவைத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் !

4 மாதங்களில் 6,900 பேரின் வேலை காலி.. வேட்டுவைத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் !

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டுவதிலும், அவற்றின் மதிப்பீட்டை அதிகரிப்பதிலும் தங்களது குறிப்பிடத்தக்க அடையாளத்தை பதித்து வருகின்றன. வென்ஞ்சர் இண்டெலிஜென்ஸ் அறிக்கையின் படி, 2022ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலாண்டு கணக்கில் இந்திய ஸ்டார்ட்அப்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளன.

இந்த நிலையில், பிசினஸ் இன்சைடரின் கணக்கீடுகளின்படி, இந்திய ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்கள் 6,900க்கும் மேற்பட்ட ஊழியர்களை விடுவித்துள்ளன.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் பெட்டர் டாட் காம் (Better.com) மார்ச் 2022 இல், அதன் அமெரிக்கா மற்றும் இந்தியா அலுவலகத்தைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் இருந்தே அதிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

4 மாதங்களில் 6,900 பேரின் வேலை காலி.. வேட்டுவைத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் !

கால்டாக்சி ஒருங்கிணைப்பு நிறுவனமான ஓலா, அதன் ஊழியர்கள் 2,100 ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. 200 டார்க் ஸ்டோர்களையும் மூட உள்ளதாக ஓலா நிறுவனம் அறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லைஃப் ஸ்டைலை மையமாகக் கொண்ட சமூக வர்த்தக தளமான ட்ரெல், இந்தியாவின் பல்வேறு அலுவலகங்களில் கிட்டத்தட்ட 50 சதவீத பணியாளர்களை அல்லது சுமார் 300 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று, லிடோ லேர்னிங், ஃபர்லென்கோ, மீஷோ, ஓகே கிரெடிட் போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பணியாளர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like