3,676 அடி உயர மலையை அசால்ட்டாக ஏறிய 68 வயது மூதாட்டி!

68 வயதான மூதாட்டி ஒருவர் செங்குத்தான மலை ஒன்றை அசால்ட்டாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஆஷா அம்பாதே என்ற மூதாட்டி 3,676 அடி உயரம் கொண்ட செங்குத்தான ஹரிஹர் மலைக் கோட்டையின் மீதேறி சாகசம் புரிந்துள்ளார்.
அவர் அந்த மலை மீதேறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. மிகவும் குறுகலாக உள்ள ஹரிஹர் மலைக்கோட்டையின் செங்குத்து படிகளை ஆஷா அம்பாதே சிரமமின்றி ஏறியுள்ளார்.
மலையின் உச்சியை அவர் அடைந்தவுடன் அங்கு குழுமியிருந்தவர்கள் கர ஒலி எழுப்பி அவருக்கு உற்சாகம் கொடுத்தனர்.
If there is a will there's a way....
— Dayanand Kamble (@dayakamPR) October 9, 2020
Look at this 70 year old mountaineer, salute to this "माऊली" #जयमहाराष्ट्र pic.twitter.com/lVpETjQJ8u
newstm.in