1. Home
  2. தமிழ்நாடு

“தளபதி 68” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!


விஜயின் 68-வது படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லியோ இந்தாண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த சூழலில் விஜயின் 68-வது படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தது.

முதலில் அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர்களில் யாரேனும் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயின் 68-வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


“தளபதி 68” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அதன்படி இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே 2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'புதிய கீதை' படத்துக்கு யுவன் இசை அமைத்தார்.

இதன்மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது விஜய் 68-வது படத்தின் அப்டேட் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “கனவு நிஜமானது..” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


newstm.in

Trending News

Latest News

You May Like