மகள் வயது பெண்ணை திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி!

திமுகவை சேர்ந்த 67 வயது நிர்வாகி ஒருவர் மறைந்த முதல்வர் கருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாவல் பூண்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் (67) 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ளார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த அபிதா (28) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அபிதா பட்டிமன்ற பேச்சாளர்.
இருவரின் நட்பும் நாளடைவில் காதலாக மாறியது. எனவே சுந்தரேசன் அபிதாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியார் வயதான காலத்தில் தனக்கு உதவி தேவை என்றுதான் மணியம்மையை திருமணம் செய்தார். அவர் வழியில் வந்த கருணாநிதியும் அப்படித்தான். அது போல தானும் தனது மனைவியிடம் சம்மதத்தை கேட்டு அபிதாவை திருமணம் செய்து கொண்டதாக சுந்தரேசன் கூறியுள்ளார்.
newstm.in