மின் தடையை சமாளிக்க 670 ரயில் சேவை ரத்து.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!

மின் தடையை சமாளிக்க 670 ரயில் சேவை ரத்து.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!

மின் தடையை சமாளிக்க 670 ரயில் சேவை ரத்து.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!
X

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நிலக்கரி விநியோகம் செய்யும் வகையில் 670 பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், மின் தேவையும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, நிலக்கரி சுரங்கங்களில் இருந்து மாநிலங்களுக்கு நிலக்கரியை கூட்ஸ் வண்டியில் எடுத்துச் செல்லும் வகையில், பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளது.

அதன்படி, அனல் மின் நிலையங்களுக்கு விரைவாக நிலக்கரியை எடுத்துச் செல்லும் வகையில், சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்படி, கடந்த நாட்களில் 670 நடைகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே சார்பில் நாள்தோறும் 400-க்கும் அதிகமான பெட்டிகள் மூலம் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பை உறுதி செய்யும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த சேவை தொடரும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Next Story
Share it