தமிழகத்திற்கு 6,600 கோடி ரூபாய் நிதி!! கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இதுவரை 6,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜனதா தொண்டர்களுடன் மெய்நிகர் பேரணி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது ;
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நிதி தேவைப்படும் என்பதால் தமிழக அரசுக்கு 6,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி இந்த மூன்று மாதத்திற்குள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், மக்கள் எந்தவித கஷ்டத்தையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் இந்த மூன்று மாதத்தில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கல்யான் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டுள்ளது.
இது 8.64 மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஜன் தன் வங்கி கணக்கி்ல் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு 610 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 1.22 கோடி பெண்கள் இதனால் பயன் அடைந்துள்ளனர் என இவ்வாறு நிர்மலாக சீதாராமன் தெரிவித்துள்ளார்.
newstm.in