1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்.. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.55 கோடியாக உயர்வு..!

குட் நியூஸ்.. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.55 கோடியாக உயர்வு..!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 63 கோடியே 55 லட்சத்து 11 ஆயிரத்து 666 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.


கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 63 கோடியே 55 லட்சத்து 11 ஆயிரத்து 666 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 90 ஆயிரத்து 752 பேர் உயிரிழந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like