1. Home
  2. சினிமா

600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்த சமந்தா!!

600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்த சமந்தா!!

உடல்நல பாதிப்பு குணமாக நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் 600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார்.

பிரபல நடிகையான சமந்தா, அண்மையில் மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவும் சென்று வந்தார். இதற்கிடையே யசோதா பட புரமோஷனிலும் அவர் கலந்து கொண்டார்.

உடல்நிலை குறித்து ட்விட்டர் வழியே கருத்து தெரிவித்த சமந்தா, போராடிக்கொண்டே இருங்கள், நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள், திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்று நம்பிக்கை அளிக்கும் கருத்துகளை பலருக்கும் தெரிவித்தார்.


600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்த சமந்தா!!


மேலும் தொடர்ந்து சமந்தா தீவிர உடற்பயிற்சியும் செய்து வருகிறார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

யசோதா படத்துக்கு பிறகு சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் சமந்தா பழனி முருகன் கோவிலில் மனமுருக வழிபாடு நடத்தினார்.

உடல்நல பாதிப்பு குணமாக நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் 600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார். சமந்தா வழிபாடு நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


newstm.in

Trending News

Latest News

You May Like