இடி, மின்னல் தாக்கி 65 ஆடுகள் உடல்கருகி பலி.. விவசாயி கதறல் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள உ.செல்லூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை தன்னுடைய விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து பராமரித்து வந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது ராமச்சந்திரனின் ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது.
அப்போது ஆடு கட்டப்பட்டிருந்த இடத்தில் திடீரென பெரியளவில் இடி, மின்னல் தாக்கியது. இதில் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 65 ஆடுகள் கருகி பலியாகின. இதனை கண்ட விவசாயி ராமச்சந்திரன் கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே இடி, மின்னல் தாக்கி 65 ஆடுகள் உயிரிழந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அரசு சார்பில் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஆடுகளை நம்பி தனது வாழ்வாதாரம் இருந்து வந்த நிலையில் இடி, மின்னல் தாக்கி மொத்தமும் இறந்தது ராமச்சந்திரன் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in