1. Home
  2. தமிழ்நாடு

60 ஆண்டு கால லோகோவை மாற்றியது நோக்கியா!!

60 ஆண்டு கால லோகோவை மாற்றியது நோக்கியா!!

நோக்கியா நிறுவனம் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த லோகோவை மாற்றியுள்ளது.

90களில் செல்போன் என்றால் அது நோக்கியாதான். பின்லாந்தை சேர்ந்த இந்நிறுவனம் செல்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் செல்போன் விற்பனை துறையில் கால் பதித்து கோலோச்சியுள்ளன.

ஆனாலும், இப்போதும் நோக்கியா மார்க்கெட்டில் போட்டி நிறுவனமாகவே உள்ளது. தற்போது மீண்டும் சந்தையை பிடிக்கும் நோக்கத்தில் நோக்கியா நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் நோக்கியா நிறுவனம் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த லோகோவை மாற்றியுள்ளது.



60 ஆண்டு கால லோகோவை மாற்றியது நோக்கியா!!

ஏற்கனவே இருந்த நீல நிற வடிவம் முற்றிலும் நீக்கப்பட்டு 5 விதமான தோற்றத்தில் நோக்கியா என்ற எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த லோகோவும் மக்களை கவரும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.


60 ஆண்டு கால லோகோவை மாற்றியது நோக்கியா!!

லோகோ மாற்றம் நோக்கிய நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும், செல்போன் என்றாலே எவர்கிரீனாக எப்போதும் நோக்கியா நினைவில் நிற்கும் என்பது உண்மை.


newstm.in

Trending News

Latest News

You May Like