1. Home
  2. தமிழ்நாடு

6 ஆண்டுகளில் இல்லாத வெயில் இன்று!!


சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று வெயில் வாட்டி எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி முதல் வரும் 29ஆம் தேதி வரை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு சென்னையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிப்பதால், அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை, மயக்கம் உள்பட பல்வேறு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


6 ஆண்டுகளில் இல்லாத வெயில் இன்று!!

ஆகையால், பொதுமக்கள் வெப்பம் அதிகம் உள்ள நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், குறிப்பான வயதானவர்கள் கத்திரி வெயிலை தவிர்ப்பது நல்லது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பதிவானது. அதன்படி, 42.7 டிகிரி செல்சியல், அதாவது 190 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.


6 ஆண்டுகளில் இல்லாத வெயில் இன்று!!

இதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டு முழுவதும் பல இடங்களில் இதே போன்று வெயில் கொடூரமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like