1. Home
  2. தமிழ்நாடு

பணம் சம்பாதிப்பதற்காகவே பிறந்த 6 ராசிக்காரர்கள்..!

1

நம்மில் பலரும் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், தன்னுடைய குடும்பத்தை உயர்த்த, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, வசதியாக வாழ என ஏதேனும் ஒரு காரணத்திற்காக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மன நிலையில் இருப்போம். அதில் பலர் கடினமாக உழைத்தும் பணம் சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கும்.

பலர் அதிக பணம் சம்பாதித்தும் அதை முறையற்ற வகையில் செலவிடக்கூடிய நபராக இருப்பார்கள். இந்த பதிவில் பணம் சம்பாதிப்பதற்காகவே பிறந்த ராசிகள் யார், அவர்கள் எதை செய்தாலும் அவர்களிடம் எப்படி பணம் சேருகிறது என்பதை தெரிந்து கொள்வோம். பணத்தை அதிகம் சம்பாதிக்கும் ராசிகளை வரிசையாக பார்ப்போம்.

கன்னி

நுண்ணறிவு, திறமை, நிதி மேலாண்மையைத் தரக்கூடிய புதன் பகவான் ஆளக்கூடிய ராசி கன்னி. ஜோதிடத்தில் பணக்காரர்கள் அதிகம் நிறைந்த ராசிகளில் ஒன்றாக உள்ளது.

இந்த ராசியை சேர்ந்தவர்கள் எதை செய்தாலும் அதை சிந்தித்து செய்வதோடு, ஒழுங்காக, திருத்தமாக செய்ய நினைப்பார்கள். கடினமான சூழலில் எப்படி வேலை செய்ய வேண்டும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என யோசித்து சரியான மாற்றங்களைக் கொண்டு வர முயல்வார்கள்.
எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கும் இவர்கள் பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகளாகவும், பணத்தை கவனமாக கையாளக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். பல நேரங்களில் ஆபத்தான முடிவுகளை எடுத்து அதிக லாபத்தை ஈட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் மற்றவர்கள் நினைத்ததை விட வேகமாக வளர்கிறார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பிறர் சொல்வதைக் கேட்டு செயல்படுபவர்கள் அல்ல. இவர்கள் தங்களின் உள்ளுணர்வுக்கு ஏற்ப முடிவுகளை செய்யக்கூடியவர்கள். தங்களுக்கு எந்த துறை ஒத்து வரும் என உணர்ந்து செயல்படுவார்கள்.
சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்தாலும் அதை சிறப்பாக நடத்தவும், லாபத்தை ஈட்டுவதற்கான சூழலை முதலில் புரிந்து கொண்டு தொடங்குவார்கள். அதனால் அவர்கள் விரும்பிய லாபம் ஈட்டுகின்றனர்.


விருச்சிக ராசியை சேர்ந்த ஆண் அல்லது பெண் அவர்கள் நடத்தும் நிறுவனத்தை எப்படி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முழுமையான ஞானத்துடன் செயல்படுவார்கள்.தங்களின் செயல்களில் மர்மமானவர்களாகவும், திட்டங்களை செயல்படுத்தவும் வாய்ப்புள்ளது. எதிரிகளின் முழு பலத்தை அறிந்து செயல்படுவார்கள். அதனால் எதிரிகள், போட்டிகளைத் தாண்டி முன்னேறக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

நவகிரக தலைவன் சூரிய ஆலக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய தன்னம்பிக்கையே அவர்களை வாழ்க்கையில் உச்சத்திற்குக் கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சம். இவர்கள் எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயல்பவர்கள். ஒரு விஷயத்தை எப்படி வெவ்வேறு வழிகளில் செய்து முடிக்க முடியும் என்ற வகையில் சிந்திப்பார்கள்.இவர்கள் தங்களின் செயல்களால் மட்டுமல்லாமல், தங்களின் வார்த்தைகளால் பிறரி கட்டுப்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள். எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை கொண்டவர்கள். உலகில் உள்ள பணக்கார பட்டியலில் பெரும்பாலானோர் சிம்ம ராசியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம்

செல்வத்தை, சுகத்தை அள்ளித்தரும் சுக்கிரன் ஆளக்கூடிய ராசி ரிஷபம். இவர்கள் பொறுமை மற்றும் புதுமையை விரும்பக்கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை எப்படி முழுமையாக, சிறப்பாக செய்து முடிக்கலாம் என்ற சிந்தனையும், நினைத்ததைச் சாதித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களிடம் உண்மைத் தன்மையும், ஆளுமைத் திறனும் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக தொட்டதெல்லாம் பொன்னாகக்கூடியதாகவும், பணம் குவியக்கூடியதாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் நேரம் காலம் பார்க்காமல் தன்னுடைய வேலையை செய்து முடிக்க வேண்டும் என கடினமாக உழைப்பவர்கள். குறைந்த ஊதியமாக இருந்தாலும் தன் வேலையை நிறைவாக, சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என நினைப்பார்கள்.
அதனால் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய விஷயங்களை கூட எளிதாக செய்துவிடுவார்கள். தங்களின் துறையில் சாதிக்கும் எண்ணமும், சாதாரண யோசனைகளைத் தாண்டி, வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதோடு ஒரு பிரச்சினை வருவதற்கு முன்னரே அதை தீர்ப்பதற்கான தீர்வை தயாராக வைத்திருப்பார்கள். தங்கள் வேலை, தொழிலில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் யோசித்து செயல்படுவார்கள். அதனால் வேலையை வேகமாக முடிப்பதோடு, நினைத்ததை விட விரைவாக செல்வந்தர் ஆவார்கள்.

மேஷம்

நவகிரகங்களில் ஒருவர் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கக்கூடியவர் செவ்வாய் பகவான். அவரே ராசி நாதனாக அமைந்ததுள்ளதால் மேஷ ராசிக்காரர்கள் எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் திறை கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களிடம் பொறுமை குறைவாகவே இருக்கும். எதையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற அவசரம் இருக்கும். எந்த செயலிலும் அதிக நாட்டம், ஆர்வம் இருக்கும்.இவர்களின் வேகம், மன உறுதி, தன்னம்பிக்கை இவர்களின் இலக்கை வேகமாக அடைய உதவும். அதன் மூலம் பணத்தை வேகமாக சேர்ப்பார்கள். தங்களின் வாழ்க்கையில் பொறுமை மற்றும் கடின உழைப்பைக் கடைப்பிடித்தால் இவர்களிடம் செல்வம் எப்போதும் நிரந்தரமாக தங்கும்.

Trending News

Latest News

You May Like