1. Home
  2. தமிழ்நாடு

6 பன்னீர்செல்வங்களுக்கு சின்னம் ஒதுக்கீடு..!

1

ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது போல் அன்றைய தினமே உசிலம்பட்டி தாலுக்கா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மகன் பன்னீர் செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில் ஓபிஎஸ் என்ற ஒரே பெயர் இனிஷியலில் மேலும் 3 பேர் வேட்புமனு தாக்கல்.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் உசிலம்பட்டியை சேர்ந்த எம்.பன்னீர் செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுவதால் வாக்காளர்களை குழப்பும் உத்தியாக அவர் பெயர் கொண்ட மேலும் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த 5 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டிருக்கிறது. இதன்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர அவரது பெயரில் மேலும் 5 பேர் என மொத்தம் 6 பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர்.

இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 6 பன்னீர் செல்வத்திற்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்/ ஓட்டகாரத்தேவர் - பலாபழம்
  • ஒ. பன்னீர் செல்வம்/ஒச்சத்தேவர், திருமங்கலம் - வாளி
  • ஒ. பன்னீர் செல்வம்/ஒய்யாரம், ராமநாதபுரம் - கண்ணாடி டம்ளர்
  • ம. பன்னீர் செல்வம்/மலையான்டி, ராமநாதபுரம் - பட்டாணி
  • ஒ. பன்னீர் செல்வம்/ஒய்யாத்தேவர், மதுரை - திராட்சை
  • ஒ. பன்னீர் செல்வம்/ஒச்சப்பன், உசிலம்பட்டி - கரும்பு விவசாயி

Trending News

Latest News

You May Like