இன்று முதல் நடைமுறைக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள்..!
செப்டம்பர் 1 முதல், எச்டிஎஃப்சி வங்கி தனது பயன்பாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ஈட்டப்படும் ரிவார்டு புள்ளிகளுக்கு ஒரு வரம்பை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக மாதத்திற்கு 2,000 புள்ளிகளைப் பெற முடியும். மேலும் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் செய்யப்படும் கல்வி சார்ந்த கட்டணங்களுக்கு எச்டிஎஃப்சி வங்கி எந்த ரிவார்டு புள்ளிகளையும் வழங்காது.
செப்டம்பர் 2024 முதல், கிரெடிட் கார்டுகளில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச கட்டணத்தை குறைத்தும், பேமெண்ட் காலத்தை 18-ல் இருந்து 15 நாட்களாக குறைக்கவும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் முடிவு செய்துள்ளது. மேலும், யூபிஐ மற்றும் பிற இயங்குதளங்களில் RuPay கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பிற கட்டணச் சேவை வழங்குநர்களிடமிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் அதே வெகுமதி புள்ளிகளைப் பெறுவார்கள்.
செப்டம்பரில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தி அறிவிக்கும் என்று ஊகங்கள் உள்ளன. அரசாங்கம் டிஏவை 3% உயர்த்தலாம். அபடியென்றால் தற்போதைய 50% டிஏவை 53% ஆக இனி அதிகரிக்கும்.
ஆதார் கார்டுகளை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 ஆகும். இந்த தேதிக்குப் பிறகு, ஆதார் கார்டுகளுக்கான சில அப்டேட்களை இலவசமாக செய்ய முடியாது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். முன்னதாக, இலவச ஆதார் புதுப்பிப்புகளுக்கான கடைசி தேதி ஜூன் 14, 2024 என இருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் போலி அழைப்புகளைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டிராய் கடுமையான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை 140 மொபைல் எண்களின் தொடர்களில் இருந்து தொடங்கி பிளாக்செயின் அடிப்படையிலான டிஎல்டிக்கு அதாவது விநியோகிக்கப்பட்ட லேசர் தொழில்நுட்ப தளத்திற்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் வணிக செய்திகளை மாற்றுமாறு டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.இது போலி அழைப்புகளை செப்டம்பர் 1 முதல் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றுவது வாடிக்கையாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இம்முறையும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான எரிபொருள் மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதங்கள்: எல்பிஜிக்களைப் போலவே, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விமான எரிபொருள் மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி விலைகளும் மாதத்தின் முதல் தேதியில் மாற்றப்படுவது வாடிக்கையாகும்.