கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம்..!
கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி வந்த தனது சகோதரர் கணேசன் காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என தென்காசி மாவட்டத்தை சேர்ந்த திருமலை என்பர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ம் தேதி கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல்நிலையத்தில் அளித்த புகார் மீதான விசாரணை மந்த கதியில் நடந்து வருவதாக மனுவில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா யோகா மையத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், 6 பேர் காணாமல் போய் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Share: