தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:பல்வேறு அரசு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்.
- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம்.
- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமனம்.
- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்.
- சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.