நாளை மறுநாள் ஒரே நேரத்தில் 6 படங்கள் ரிலீஸ்..!
ஆகஸ்ட் 1ம் தேதி 7 படங்கள் வெளிவந்த நிலையில் ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஓரிரு படங்கள் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம், “பாய், காத்து வாக்குல ஒரு காதல், மாமரம், ராகு கேது, ரெட் பிளவர், உழவர் மகன்,” ஆகிய 6 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்.
'கூலி' படத்திற்குப் பிறகும் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளதால் சிறிய படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பது சிரமம். அதனால், கிடைக்கும் இடைவெளியில் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களை வெளியிடுவதாகத் தெரிகிறது.
'கூலி' வெளியான பின்புதான் எத்தனை நாட்கள் ஓடும் என்பது தெரிய வரும். அதனால், குறைந்தது இரண்டு வாரங்கள் வேறு எந்தப் படத்தையும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.
.png)