1. Home
  2. தமிழ்நாடு

மக்களே எச்சரிக்கை..!! இனி வீட்டில் கிளி வளர்த்தால் 6 மாதம் வரை சிறை..!!

மக்களே எச்சரிக்கை..!! இனி வீட்டில் கிளி வளர்த்தால் 6 மாதம் வரை சிறை..!!

பச்சை கிளிகளை வளர்ப்பதும் விற்பதும் குற்றம். ஆனால், சமீபகாலமாக ஆன்லைனிலும், நேரடியாகவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளிகளை குஞ்சு பருவத்தில் இருந்தே வீட்டில் வளர்த்தால், பேசும் திறன் பெற்று அன்பாக பழகும். இதன் காரணமாகவே கிளிகளை வளர்க்க விரும்புகின்றனர். இதற்காக கிளிகளை பிடித்து, இறகுகளை வெட்டி, துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கின்றனர்.

இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடி கிளி, 2 ஆயிரம் முதல், 5 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து, கோவை வனச்சரகர் அருண்குமார் கூறும்போது, கோவை மாவட்ட வன அலுவலகத்தில் பறவை மறு வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு, மீட்கப்பட்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளிகள் பராமரிக்கப்படுகின்றன.

இதில், 300-க்கும் மேற்பட்டவை வீடுகளில் வளர்க்கப்பட்டவை தான். வளர்ப்பவர்களிடம் விசாரித்தால், இது குற்றம் என்பதே எங்களுக்கு தெரியாது என்கின்றனர்.

எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைனிலும், நேரடியாகவும் கிளிகள் வாங்கி வளர்ப்பில் ஈடுபட்டால், 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.

Trending News

Latest News

You May Like