அதிர்ச்சி! 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கடைக்காரர்!!
வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கடைக்காரர் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் சாஸ் என்ற இடத்தில் அசோக் ஜன்ஜாரியா (37) என்ற நபர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், பக்கத்து வீட்டு பெண் ஒருவரும் கடை நடத்தி வருகிறார். அந்த பெண்ணுக்கு 6 வயதில் மகள் இருக்கிறார்.
இதனால் அசோக், அந்த சிறுமியுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சிறுமியின் குடும்பத்தோடும் அசோக்கிற்கு நல்ல பழக்கம் இருந்துள்ளது. சுமார் 5 ஆண்டுகளாக அசோக், சிறுமியின் குடும்பத்தோடு பழகி வந்துள்ளார்.
சிறுமி அசோக்கின் கடைக்கு சென்று தனக்கு தேவையான தின்பண்டம் எடுத்து சாப்பிடுவார். சிறுமியை விளையாட விட்டுவிட்டு தாயும் தனது வேலையை பார்க்க சென்று விடுவார். இந்த சூழலில் கடையின் மேல் தளத்தில் சக சிறுவர்களுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
விளையாடி விட்டு அனைவரும் வீடு திரும்பிய நிலையில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அசோக், சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி கத்தி கூச்சலிட்டதை அடுத்து, அசோக் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார். ரத்தப் போக்குடன் கிடந்த சிறுமியை பார்த்து தாய் கதறி அழுதார். தாயிடம் சிறுமி நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு, அசோக் குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்து. வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in