1. Home
  2. தமிழ்நாடு

கொடுத்த கடனை கேட்டதால் பெண் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை!!

கொடுத்த கடனை கேட்டதால் பெண் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை!!

பெண் ஒருவர் தாம் கொடுத்த கடனை கேட்டதால், வீட்டின் உரிமையாளர் அந்த பெண்ணை ஆறு துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த சந்திர மோகன் (48) என்பவரின் வீட்டின் கீழே அனுராதா (55) என்ற பெண் வசித்து வந்தார். இவரிடம், சந்திரமோகன் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், சந்திர மோகனால் அந்த கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை. அனுராதா பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரமோகன், அனுதாராவை கொலை செய் திட்டமிட்டார்.


கொடுத்த கடனை கேட்டதால் பெண் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை!!

கடந்த 12ஆம் தேதி அனுராதா, சந்திர மோகனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். அப்போது சந்திர மோகன், அனுராதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை 6 பகுதிகளாக வெட்டினார்.

உடலை பிரிட்ஜ் ஒன்றில் வைத்துள்ளார். தலையை ஒரு குப்பை தொட்டியில் போட்டுள்ளார். மறுநாள் காலை துப்புரவு பணியாளர் ஒருவர் குப்பையில் கிடந்த தலையை கண்டு அதிர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

விசாரணை மேற்கொண்ட போலீஸார், அந்த தலை அனுராதாவுடையது என்று கண்டறிந்து, அவர் வசித்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது சந்திர மோகன் மீது சந்தேகம் ஏற்பட்டது.


கொடுத்த கடனை கேட்டதால் பெண் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை!!

அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்ட போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் அவரது வீட்டின் பிரிட்ஜில் இருந்த அனுராதாவின் உடல் பகுதிகளையும் மீட்டு ஆய்வுக்கு அனுப்பினர்.

பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like