1. Home
  2. தமிழ்நாடு

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்!!

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்!!

ஆபாச படங்கள் பார்த்து 15 வயது சிறுவன் ஒருவன், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் பட்ரோ என்ற கிராமத்தை பெண் ஒருவர் தனது 6 வயது மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு சிறுமி காணமால் போயுள்ளார். மகள் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று எண்ணி, அப்பெண் வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.

ஆனால் அங்கு மகள் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சிறுமி இறந்து கிடப்பதை கண்டுபிடித்தனர்.


6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்!!

சிறுமியின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனை கைது போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அச்சிறுவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டான்.

சிறுமியை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததையும், சிறுமி கூச்சலிட்டதால் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டான். அச்சிறுவன் செல்போனில் தொடர்ந்து ஆபாச படம் பார்ப்பவன் என்பது தெரியவந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like