1. Home
  2. தமிழ்நாடு

6-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..!!

6-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..!!

சென்னை அடுத்த வண்டலூர் - கேளம்பாக்கம் பிரதான சாலையில் மேலகோட்டையூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புட்டாளா ஓம் கிரிஸ் என்பவர் பிடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவன் கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.


6-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..!!

இதனைப்பார்த்த கல்லூரி மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவனை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இநத் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

6-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..!!

வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவன் திடீரென 6வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கல்லூரி நிர்வாகமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Trending News

Latest News

You May Like