ஹிந்தி திணிப்பால் 56 மொழிகள் அழிந்துவிட்டன. அதே நிலை தமிழுக்கு வந்துவிட கூடாது - அன்பில் மகேஸ் பொய்யாமொழி..!

தமிழக அமைச்சர் மகேஷ் திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தரமான கல்வியை தான் தமிழகம் வழங்கி வருகிறது. புதிய கல்வி கொள்கை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. புதிய கல்வி கொள்கை இடை நிற்றலை அதிகரிக்கும். நிபந்தனைகள் விதிக்க கூடாது. 3வது மொழியை திணிப்பது அரசியல் சாசனம் மற்றும் மாநில உரிமைக்கு எதிரானது.
இருமொழி கல்வி கொள்கையை பின்பற்றி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் இஸ்ரோ உள்ளிட்ட உயர்துறையில் பணியாற்றுக்கிறார்கள். மத்திய அரசு தமிழக அரசை பிளாக் மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். ஹிந்தி மொழியை விரும்பி கற்றுக்கொள்வதை எதிர்க்கவில்லை. மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது.
ஹிந்தி திணிப்பால் 56 மொழிகள் அழிந்துவிட்டன. அதே நிலை தமிழுக்கு வந்துவிட கூடாது. மும்மொழி கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றலை பாதிக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் இருமொழி கல்விக் கொள்கையை ஆதரிக்கின்றன. தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உடனே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.