ஒரே நேரத்தில் 6 சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த 52 வயது முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே துலுக்கர்பட்டி தெற்கு தெருவில் யேசுராஜ் (52) என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். இவர் வீட்டருகே சிறுமிகள் ஆறு பேர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த யேசுராஜ், சிறுமிகளிடம் அசிங்கமாக பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த சிறுமிகளின் பெற்றோர் கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் கஸ்தூரி விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து யேசுராஜ் கைது செய்து தூத்துக்குடி பேருரணி சிறையில் அடைத்தார்.
newstm.in