1. Home
  2. தமிழ்நாடு

வங்கி வேலை தேடுபவரா நீங்கள்..? 500 காலி பணியிடங்கள்.. பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை!!

வங்கி வேலை தேடுபவரா நீங்கள்..? 500 காலி பணியிடங்கள்.. பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை!!

இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது பேங்க் ஆஃப் இந்தியா.இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3,415 கிளைகள் உள்ளன. இந்த நிலையில், அரசு பொது துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி:

Credit Officer in General Banking stream - 350 பணியிடங்கள்

IT Officer in Specialist stream - 150 பணியிடங்கள்


வங்கி வேலை தேடுபவரா நீங்கள்..? 500 காலி பணியிடங்கள்.. பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை!!


கல்வித்தகுதி: மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும். மேலும், பதவிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுப்படுகிறது. ஆகையால் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 25 , 2023

விண்ணப்பிக்க வேண்டிய முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்,

விண்ணப்ப கட்டணம்:

1.பொது / ஈடபிள்யூஎஸ் / ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணம் ரூ.850.

2. எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி பிரிவினருக்கு தகவல் கட்டணம் ரூ.175.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

முதலில் https://bankofindia.co.in/recruitment-notice என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்

பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்பிக்க வேண்டும்.


Trending News

Latest News

You May Like